இரசாயன உரம் மற்றும் கிருமி நாசனிகளை பயன்படுத்துவதன் காரணமாக நாட்டில் புற்றுநோய், சிறுநீரக நோய்களால், வருடாந்தம் இரண்டு லட்சத்து 39 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
இவர்களில் 75 ஆயிரம் பேர் புற்று நோய் காரணமாகவும் ஒரு லட்சத்து 64 ஆயிரம் பேர் சிறுநீரக நோய் காரணமாகவும் உயிரிழப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வருடாந்தம் 6 ஆயிரம் சிறுநீரக நோயாளர்களும், தினமும் 54 புற்று நோயாளர்களும் இறக்கின்றனர்.
வருடாந்தம் சுமார் 30 ஆயிரம் புற்று நோயாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இரசாயன உரம் மற்றும் விஷம் கலந்த கிருமி நாசனிகள் புற்று நோய் மற்றும் சிறுநீரக நோய்களுக்கு காரணமாக அமைந்துள்ளன.
இதனை மருத்துவ நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது மிகவும் மோசமான நிலைமை எனவும் சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பாக நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.



















