வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிம்பன்சி எனப்படும் மனித குரங்கு 20 ஆண்டுகளுக்கு பின்னர் குட்டியை ஈன்றது.
வண்டலூர் அண்ணா பூங்காவிற்கு சிங்கப்பூரில் இருந்து ஆண், பெண் என இரண்டு மனித குரங்குகள் வண்டலூர் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன.
இந்த குரங்குகள் தான் நாம் வண்டலூர் பூங்காவிற்கு செல்லும் போது முதலில் தென்படுவது இந்த மனித குரங்குகள் தான்.
கவுரி -கோம்பி மனித குரங்குகளை இனவிருத்திசெய்ய பூங்கா கால்நடை மருத்துவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் எந்த பலனும் இல்லை.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் 17ம் முதல் நவம்பர் 10ம் வரைக்கும் பூங்காவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
ஆக பூங்காவில் அமைதியான சூழல் இதில் கவுரி -கோம்பிக்கு காதல் மலர்ந்தது இவர்களின்காதலுக்கு சாட்சியாக சில தினங்களுக்கு முன்னர் குட்டியை ஈன்றது கவுரி.
20 ஆண்டுகளுக்கு பின்னர் மனித குரங்கு குட்டியை ஈன்றதால், பூங்கா மருத்துவர்கள், அதிகாரிகள், பணியாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
அதே சமயம் தற்போது சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் மனித குரங்குகளை அதிக கவனம் எடுத்து பாதுகாத்து வருவதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.