நடிகை காஜல் அகர்வால் தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர், இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
மேலும் காஜலின் கணவர் கவுதம் கிச்சலு அமெரிக்காவில் படித்துவிட்டு மும்பையில் சொந்தமாக தொழில் நிறுவனத்தை தொடங்கி வீடு மற்றும் வணிக கட்டிடங்களில் பெரிய அளவில் உள்அலங்காரம் செய்யும் பணியை செய்து வருகிறார்.
காஜல் அகர்வாலும் தற்போது இந்த தொழிலை கற்று வருகிறார். ஓய்வு நேரங்களில் கம்பெனிக்கு சென்று கணவருக்கு உதவியாக இருந்தும் வேலைகளை பார்க்கிறார்.
மேலும் முழுநேரமாக வீடுகளுக்கு உள்அலங்காரம் செய்யும் தொழிலில் ஈடுபட அவர் முடிவு செய்து இருப்பதாக தெலுங்கு திரையுலகில் தகவல் பரவி உள்ளது.
அதுமட்டுமின்றி சில தினங்களுக்கு முன்பு காஜல் ரசிகர்களுடன் கலந்துரையாடியபோது, ‘‘எனது கணவர் சினிமாவில் இருந்து விலக சொன்னால் நடிப்பதை விட்டுவிடுவேன்” என்று கூறியிருந்தார்.