மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பாலியல் இலஞ்சம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கொழும்பில் இருந்து வருகைதந்த உள்நாட்டலுவல்கள் அமைச்சின் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.
பிரதேச செயலகத்திற்கு சேவை பெறச் சென்ற பெண் ஒருவரிடம் குறித்த அதிகாரி பாலியல் இலஞ்சம் பெற்றமை மற்றும் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பெண் ஒருவரை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியமை தொடர்பாக அரசாங்க அதிபர் மற்றும் கொழும்பு பொலிஸ் மா அதிபர் திணைக்களத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்ணால் அனுப்பி வைக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் நேற்று முன் தினம் கொழும்பில் இருந்து வந்த உள்நாட்டலுவல்கள் அமைச்சின் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நேற்று முன் தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசாரணையில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் மற்றும் சம்பவத்தை நேரில் கண்ட இரண்டு சாட்சியாளர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது.
அத்துடன் அவர்களிடம் இருந்த வீடியோ, ஓடியோ ஆதாரங்களையும் பெற்றுச் சென்றுள்ளனர். இதன் படி குறித்த பிரதேச செயலாளர் மீதான அடுத்த கட்ட நடவடிக்கைகளை உள்நாட்டலுவல்கள் அமைச்சு விரைவில் மேற்கொள்ளும் எனவும் தெரியவந்துள்ளது.