வங்காள தேசத்தின் பிரபல நடிகை தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக பிரதமர் பேஸ்புக் மூலம் புகார் கூறி உள்ளார்.
வங்காள தேசத்தின் பிரபல நடிகை ஷம்சுன்னஹர் ஸ்மிருதி. போரி மோனி என்று பிரபலமாக அறியப்படும் அவர் அங்குள்ள ஒரு கிளப்பில் ஒரு தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டி பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் பேஸ்புக் பதிவில் நீதி கோரியுள்ளார்.
2015 ஆம் ஆண்டில் சினிமாவில் அறிமுகமான நடிகை இரண்டு டஜனுக்கும் மேற்பட்ட வங்காள தேச திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். ஃபோர்ப்ஸ் பத்திரிகை கடந்த ஆண்டு ஆசியாவின் 100 டிஜிட்டல் நட்சத்திரங்களில் ஒருவராக அவரை தேர்ந்து எடுத்து இருந்தது.
டாக்காவில் உள்ள ஒரு கிளப்பில் ஒரு தொழிலதிபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக குற்றம்சாட்டி உள்ளார்.
பிரதமர் ஹசீனாவை “அம்மா” என்று அழைத்த நடிகை சட்ட அமலாக்க நிறுவனங்களின் உதவியை நாடியதாகவும் ஆனால் நீதி கிடைக்கத் தவறியதாகவும் கூறினார்.
மேலும் “நான் எங்கே நீதி தேடுவேன்?” நான் ஒரு பெண், நான் ஒரு நடிகர், ஆனால் அதற்கு முன், நான் ஒரு மனிதன். என்னால் அமைதியாக இருக்க முடியாது என கூறி உள்ளார்.
உதவி ஐ.ஜி.பி சோஹல் ராணா, நடிகை போலீசை தொடர்பு கொள்ளும்போது போலீஸ் நடவடிக்கை எடுக்கும் என்று கூறி உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை பெயரைக் குறிப்பிடாமல் பேஸ்புக் பதிவில் குற்றச்சாட்டுகளை வைத்த பின்னர், நிருபர்களை சந்தித்த அவர் டாக்கா படகு கிளப்பின் பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார செயலாளர் நசீர் யு மஹ்மூத் தன்னை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டினார்,
டாக்கா படகு கிளப்பின் நிறுவன உறுப்பினரான நசீர் ரியல் எஸ்டேட் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.