கொழும்பு – வத்தளை பிரதேசத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவின் வீட்டை இன்று காலை சிறப்பு பொலிஸ் குழுவினர் சுற்றிவளைத்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவின் இல்லத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் வகையில் கூட்டமொன்று நடத்தப்படுவதாக வந்த தகவலை அடுத்தே பொலிஸார் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அவ்வாறு அங்கு எந்த கூட்டமும் இடம்பெறவில்லை எனவும் அதனை அறிந்த பின்னர் பொலிஸார் அங்கிருந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.