சீனாவின் ஆதரவுடன் கொழும்பு போர்ட் சிட்டி முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியா தமது கருத்தை மீண்டும் தெரிவித்துள்ளது.
இணையம் ஊடக இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த திட்டம் குறித்து கேட்ட போது இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி, கருத்துரைத்தார்.
இந்தியா தனது பாதுகாப்பு கண்ணோட்டத்தில் கொழும்பின் சமீபத்திய முன்னேற்றங்களை நெருக்கமாக கவனித்து வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு துறைமுக நகரத்திற்கான கட்டமைப்பின் பல அம்சங்கள் குறித்து இலங்கையில் எழுப்பப்பட்டுள்ள கவலைகளையும் இந்தியா கவனத்தில் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
சீனாவுடன் மேற்கொள்ளப்படும் இவ்வாறான திட்டங்களின் போது, இந்தியாவுடன் கடல்சார் பரஸ்பர பாதுகாப்பு உட்பட இந்தியாவுடன் உள்ள சிறந்த இருதரப்பு ஒத்துழைப்பை இலங்கை மனதில் வைத்திருக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக என்று பாகி கூறினார்.
இலங்கையில் இந்தியாவின் உதவி பெறும் திட்டங்கள் குறித்து கருத்துரைத்த பாகி, இலங்கை தேசத்தில் கூட்டாண்மை மேம்பாட்டுத் திட்டங்களின் மிக விரிவான திட்டத்தை இந்தியா கொண்டுள்ளது என்றும் அவற்றை செயல்படுத்தப்படுவது குறித்து இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளதாகவும் கூறினார்.