மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன உப்போடை பகுதியில் 9 வயது சிறுமியொருவர் ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுகியதில் பலியாகியுள்ளார்.
குறித்த சிறுமி நேற்று மதியம் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் அவரது கழுத்தில் ஊஞ்சல் கயிறு சிக்கி இறுகியதில் அவர் மயக்கமடைந்துள்ளார்.
இதனையடுத்து சிறுமி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அங்கிருந்து கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.