தற்போது நடைமுறையில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
எனினும், மாகாணங்களுக்கிடையிலான பயணக்கட்டுப்பாடு வழமைபோன்று அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 23ஆம் திகதி இரவு பத்து மணிக்கு அமுல்படுத்தப்படும் பயணக்கட்டுப்பாடானது 25ஆம் திகதி அதிகாலை நான்கு மணிவரை அமுலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.