திருகோணமலை நகர பேருந்து தரிப்பிடத்தில் ஆதரவின்றி வாழும் யாசகர்கள், உண்பதற்கு வழியின்றி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
பயணத்தடைக்கு முன்னர் திருகோணமலை நகர் பகுதிக்கு வடக்கு மற்றும் மேல் மாகாணங்களில் இருந்து வந்த யாசகர்கள் பயணத்தடை விதிக்கப்பட்டமையினால் நகரிலேயே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
தற்போதுள்ள சூழ்நிலை காரணமாக இருப்பிடமின்றி இருக்கு இவர்கள் தங்களது இருப்பிடங்களாக பேருந்து தரிப்பிடத்தை பயன்படுத்தி வருவதை காணக்கூடியதாக உள்ளது.
கடந்த ஒரு மாத காலமாக நீடிக்கும் பயணத்தடையினால் யாசகம் பெற முடியாத சூழல் நிலவுவதாகவும், உணவு இன்றி கஷ்டப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
சுமார் 30 இற்கும் அதிகமான யாசகர்கள் திருமலை நகர பிரதான பேருந்து தரிப்பிடத்தில் தற்காலிக இருப்பிடத்தை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
எனவே இது குறித்து உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு உரிய வாரான நடவடிக்கையினை எடுத்து யாசகர்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் அல்லவா?