நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையின் காரணமாக பலரும் அன்றாட உணவுத் தேவைக்கே அல்லல்படும் நிலைக்கு உருவாகியிருக்கின்றது.
இந்த சமயத்தில் பல மனிதாபிமானிகள் முன்வந்து உலருணவுப் பொருட்களை வழங்கியும் ஏனைய உதவிகளையும் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மட்டக்களப்பில் இந்து ஆலயம் ஒன்றில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டிருந்த நிலையில் அதனைப் பெற்றுக்கொண்ட முஸ்லிம் பெண்களின் நெகிழ்ச்சியான பதிவு தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
அங்கு வந்த பெண்கள் தங்களது உணர்வுபூர்வமான நன்றியைத் தெரிவித்ததோடு சில விடயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
இந்தியாவைப் போன்று இலங்கையிலும் ஒரு நல்லிணக்க சமூகம் உருவாவது பாராட்டுக்குரியது.
இதற்கு சமூக ஆர்வலர்கள் பெரும் வரவேற்கு அளித்துள்ளதோடு, இன, மத வேறுபாடுகளின்றி எப்போதும் ஒருமித்த சமூகமாக வாழ்வதை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.