கொரோனா தொற்று மனித மூளை திசுக்களை இழக்க வழிவகுக்கும் என பிரித்தானியாவில் நடத்தப்பட்டு வரும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
782 தன்னார்வலர்களை உள்ளடக்கிய நீண்டகால ஆய்வின் கண்டுபிடிப்புகளின்படி, கொரோனாவால் லேசான பாதிப்பு இருந்திருந்தால் கூட அது மூளை திசுக்களை இழக்க வழிவகுக்குமாம்.
தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து Biobank ஆய்வின் ஒரு பகுதியாக, இந்த ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு கொரோனாவுக்கு முன் மூளை ஸ்கேன் செய்தனர்.
கொரோனாவுக்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட ஸ்கேன் முடிவுகளை ஒப்பிட்டு பார்த்த ஆராய்ச்சியாளர்கள், கொரானாவிலிருந்து உயிரிபிழைத்த 394 பேருக்கு திரும்பவும் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர்.
உயிர்பிழைத்தவர்களில் பெரும்பாலோர் லேசான-மிதமான கொரோனா அறிகுறிகளை மட்டுமே கொண்டிருந்தனர், அல்லது எந்த அறிகுறிகளும் இல்லாதவர்கள், அதே நேரத்தில் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர், வாசனை மற்றும் சுவை தொடர்பான மூளை திசுக்களை இழந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
பாதிக்கப்பட்ட சில மூளைப் பகுதிகள் உணர்ச்சிகரமான எதிர்விளைவுகளைத் தூண்டும் அனுபவங்களின் நினைவுகள் தொடர்பானது என ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டனர்.
இந்த திசுக்கள் இழப்பது மூளையில் வைரஸ் பரவியதன் விளைவா அல்லது நோயின் வேறு ஏதேனும் விளைவா என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு இன்னும் தெரியவில்லை.