முல்லைத்தீவில் இதுவரை 700 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 492 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 17 ஆம் திகதி முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் இயங்கிய ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர்களுக்கு ஏற்பட்ட கோவிட் தொற்று காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் முடக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டன.
புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் உள்ள ஆடைத்தொழிற்சாலையில் சுமார் 1500 வரையான பணியாளர்ள் பணியாற்றி வருகின்றா நிலையில் அவர்களில் கடந்த மே மாதம் 17 ஆம் திகதி) 327 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் தொடர் நாட்களாக பல்வேறு பகுதிகளில் எழுமாறாக மேற்கொண்ட பீசி ஆர் பாரிசோதனைகளின் முடிவில் இதுவரை 700 பேருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதரா பணியகம் தெரிவித்துள்ளது.
அவர்களில் 492 பேர் குணமடைந்துள்ள நிலையில் தொடர்ந்து 207 பேர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் 169 குடும்பங்களை சேர்ந்த 475 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது