தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பல நடிகைகள் தற்போது பிரபலமாகி வெள்ளித்திரையில் காலடி பதித்து வருகிறார்கள். அந்தவகையில், ஆரம்பகாலத்தில் சின்னத்திரை நடிகையாகவும் அதே சமயம் வெள்ளித்திரையில் குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து பேர் பெற்றவர் நடிகை நீலிமா ராணி.
சமீபகாலமாக இருத்துறையிலும் வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்த நீலிமா போட்டோஹுட்டில் கவனம் செலுத்தி வருகிறார். அது ஒரு பக்கம் இருந்தாலு யுடியூப்பில் நீல்ஸ் என்ற சேனலில் தனிப்பட்ட அக்கரை மற்றும் டிப்ஸ்களையும் சினிமா அனுபவங்களை பற்றியும் கூறி வருகிறார்.
சமீபத்தில் “Fathers Day” ஸ்பெஷலாக தன்னுடைய அப்பா பற்றி ஒரு உணர்ச்சிப்பூர்வமான வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் நீலிமா ராணி. தன்னுடைய, அப்பா தூங்கிக்கொண்டிருக்கும் போதே இறந்து விட்டார்.
அப்போது, நான் அவருக்கு அருகில் தான் படுத்திருந்தேன். இப்போது வரை அது என்னுடைய நியாபத்தில் உள்ளது என்று ஆரம்பித்த அவர், தன்னுடைய தந்தையின் வாழ்க்கை பயணத்தை விரிவாக பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், விசாக பட்டினத்தில் என்னுடைய தந்தை எலக்ட்ரானிக் கடை ஒன்றை வைத்திருந்தார். நாங்க இருக்கும் வீட்டின் தெருவில் மூளையில் தான் என் தந்தையுடைய கடை இருக்கும். அப்போது எனக்கு மூன்று வயது இருக்கும், வெறும் ஜட்டி-யை மட்டும் போட்டுக்கிட்டு நான் என்னுடைய அப்பா கடைக்கு தனியா நடந்து போயிட்டு இருந்திருக்கேன்.
எங்க வீட்ல என்னை காணோம்-ன்னு தேடிகிட்டு இருந்திருக்காங்க.. அப்போ ஸ்கூட்டியில எதிர்-ல வந்த என் அப்பா யாருடா இது நம்ம பொண்ணு மாதிரி இருக்குன்னு என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போனார்கள் என்று கூறியதுடன் தன் தந்தையை பற்றி கண்ணீருடன் கூடிய அனுபவத்தையும் கலந்துரையாடியுள்ளார்.