உடல் உயரத்தில் அதிக வித்தியாசம் உடைய பிரித்தானிய ஜோடி, உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
பிரித்தானியாவில் லண்டனைச் சேர்ந்தவர் ஜேம்ஸ், 33. இவர் தோகைக்காட்சி நடிகர் மற்றும் தொகுப்பாளர் ஆவார்.
இவரது மனைவி ஷோலி, 27 (Chloe Lusted) ஆசிரியையாக பணியாற்றுகிறார். இவர்கள் 2013-ல் காதல் திருமணம் செய்து கொண்டனர்.
இதில் சிறப்பு என்னவென்றால், ஜேம்ஸ்சின் உயரம் 109.3 செ.மீ (3 அடி 7 அங்குலம்), ஷோலியின் உயரம் 166.1 செ.மீ., (5 அடி 5.4 அங்குலம்). இருவருக்குமான உயர வித்தியாசம், 56.8 செ.மீ., (1 அடி, 10 அங்குலம்) கிட்டத்தட்ட 2 அடி ஆகும்.
இந்த உயர வித்தியாசமே, இவர்கள் ஜூன் 2-ஆம் திகதி உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததற்கான காரணமாக அமைந்தது. ஆம், இந்த சிறப்பு தம்பதிக்கு ‘ஆண் உயரம் குறைவு; பெண் உயரம் அதிகம்’ என்ற பிரிவில் இந்த சான்றிதழ் வழங்கப்பட்டது.
Diastrophic Dysplasia என்ற மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டவர் ஜேம்ஸ். இதனால், இவரது எலும்பு மற்றும் உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
2012-ஆம் ஆண்டில், ஜேம்ஸ் தனது சொந்த ஊர் வழியாக ஒலிம்பிக் ஜோதியை எடுத்துச் சென்ற சிறிது நேரத்திலேயே, சில நண்பர்கள் அவரை சோலிக்கு அறிமுகப்படுத்தினர். சோலிக்கு, இது முதல் பார்வையிலேயே ஜேம்ஸை மீது காதல் மலர்ந்தது.
சோலி உயரமான ஆண்களை விரும்பினார். இருப்பினும், ஜேம்ஸைச் சந்தித்தபோது அவரது காதல் அவரது பார்வையை மாற்றியது.
பல சிரமங்களை எதிர்கொண்ட பிறகு, அவர்கள் அதிகாரப்பூர்வமாக 2013-ஆம் ஆண்டின் இறுதியில் திருமணம் செய்து கொண்டனர். இந்த அசாதாரண தம்பதியினருக்கு இப்போது ஒலிவியா என்ற இரண்டு வயது மகள் உள்ளார். ‘காதலுக்கு கண் இல்லை’ எனும் கூற்று உண்மை என்பதை இவர்களது வாழ்க்கை மீண்டும் நிரூபிக்கிறது.