நடிகர் ஷாருக் கான் முதன்முதலாக தீவானா என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் கவனம் பெற்றார். அவர் நடித்த தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே என்ற இந்தி திரைப்படம், வெளியான நாளில் இருந்து 25 ஆண்டுகள் திரையில் ஓடிய படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
ஏறக்குறைய திரைத்துறையில் 29 ஆண்டுகளை கடந்துள்ள அவர், டுவிட்டர் வழியே ஷாருக் கானிடம் கேளுங்கள் என்ற உரையாடல் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
இதில் ரசிகர்கள் பலர், அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்தனர். அவற்றுக்கு தனக்கே உரிய வகையிலான நகைச்சுவை உணர்வுடனும், புத்திசாலித்தனத்துடனும் அவர் பதில் அளித்து உள்ளார்.
அவரிடம் ரசிகர் ஒருவர், காதலில் தோல்வி அடைந்த நபர் அதில் இருந்து மீண்டு வெளிவருவது எப்படி? என கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகர் ஷாருக் கான், அதில் இருந்து நீங்கள் ஒருபோதும் வெளிவர முடியாது…
அதனை நினைவாக வைத்திருங்கள். அந்த சோகத்தில் இருந்து கற்று கொள்ளுங்கள். அது உங்களை வலிமை உடையவராக ஆக்கும் என தெரிவித்து உள்ளார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில், குறைவாக வேலை செய்து, என்னுடைய குடும்பத்தினருடன் அதிகம் செலவிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.