அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக அதிருப்தியடைந்துள்ள ஆளும் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், தற்போது அரசியல் அணி ஒன்றுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கம் சென்று கொண்டிருக்கும் வழி குறித்து அதிருப்பதியடைந்துள்ள மற்றும் மாற்றத்தை எதிர்பார்த்துள்ள ஆளும் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார் என சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் பிரதமர் மகிந்த ராஜபக்ச மகிழ்ச்சியாக இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு நெடுந்துர பயணம் கிடையாது என்பதுடன், எந்த இடத்திலானது அதிருப்தி வெடித்து சிதறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது ஐக்கிய தேசியக் கட்சி சிறிய விளக்கொன்றை ஏற்றினால் மாத்திரம் போதும் எனவும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.