மலையாளத்தில் தொடர்ந்து பல சஸ்பென்ஸ் தில்லர் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது, அந்த வகையில் கடந்த ஆண்டு வெளியான அஞ்சாம் பத்திரா பெரிய வரவேற்பை பெற்றது.
மேலும் சைக்கோ தில்லர் திரைப்படமான இதில் பல நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியடைந்தது.
இந்நிலையில் தற்போது இப்படத்தை தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆம் இதில் நடிகர் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.