இதய நோய், பக்கவாதம் மற்றும் இறப்புக்கு முக்கியமான ஆபத்து காரணியாக பெருந்தமனி தடிப்பு உள்ளது.
இது தமனிகளின் சுவர்களில் ப்ளேக்குகளின் கட்டமைப்பால் தமனிகளை சுருக்கி, பல்வேறு இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
ஆரோக்கியமான உணவுகளுடன் உடற்பயிற்சியையும் அன்றாடம் மேற்கொண்டு வந்தால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
அதேப் போல் நட்ஸ்களும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன. இப்போது நட்ஸ்களில் எந்த நட்ஸ் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதைக் காண்போம்.
பிஸ்தா
பிஸ்தாவில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவு மற்றும் இதில் வைட்டமின் பி6, காப்பர் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
ஆகவே மாலை வேளையில் பசி எடுக்கும் போது கண்ட ஸ்நாக்ஸ்களை சாப்பிடாமல், ஆரோக்கியமான பிஸ்தாவை ஒரு கையளவு சாப்பிடுங்கள். இதனால் பசியும் அடங்கும், இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
பாதாம்
பாதாமில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்து, வைட்டமின் ஈ, காப்பர் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிகம் நிறைந்துள்ளன. பாதாமை அன்றாட உணவில் சேர்ப்பது வீக்கத்தைக் குறைக்கும். மேலும் இது உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவுவதுடன், இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
வேர்க்கடலை
வேர்க்கடலையில் புரோட்டீன், மக்னீசியம், பாஸ்பரஸ், மாங்கனீசு, தயமின் மற்றும் வைட்டமின் ஈ போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளன. மேலும் இதில் வளமான அளவில் ஒலியிக் அமிலம் உள்ளது. இது கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. ஆகவே வேர்க்கடலை பிடிக்கும் என்பவர்கள், இதை தினமும் சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது.
சியா விதைகள்
சியா விதைகளில் இரும்புச்சத்து, ஃபோலேட், கால்சியம் மற்றும் மக்னீசியம் அதிகமாக உள்ளது. இதில் உள்ள அதிகளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ட்ரை கிளிசரைடுகளின் அளவைக் குறைக்கிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதோடு இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்க இரத்த சர்க்கரை அளவை நிலையாக பராமரிக்க உதவுகிறது மற்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது.




















