டியாமல் நிற்கின்றனர்.வருங்காலத்தில் சீனாவிடமிருந்தும் கிழக்கினை மீட்க வேண்டிய நிலைமையும் வரலாம் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சீனா அனைத்து நாடுகளையும் தங்கள் கைவசமாக்குவதற்கு பயன்படுத்தும் உத்தியே கடன் கொடுத்து அதன் மூலம் அந்த நாட்டுக்குள் ஊடுருவும் செயற்பாடுகளையே சீனா வழமையாக செய்து வருகின்றது.
பல நாடுகளை சீனா இவ்வாறு தன்வசமாக்கியுள்ளது.ஜன்டியா போன்ற நாடுகளில் சந்தைகளில் கோழி விற்பனை செய்பவர்கள் கூட சீன நாட்டவர்களாகவே உள்ளனர்.அவ்வாறு இருக்கும் போது நாங்கள் மட்டுமே அவர்களை அழைத்து தொலையை வீட்டுக்குள் எடுக்கின்றோம்.
வடகிழக்கு பகுதியே அதிக வளம்கொண்ட பகுதியாகும்.இலங்கையில் அந்நியர் ஆட்சிக்காலத்தில் கரையோரப் பகுதியே அதிகளவில் இலக்கு வைக்கப்பட்டிருந்தது.1815 ஆம் ஆண்டு வரைக்கும் அவர்கள் கண்டி இராஜதானியை கைப்பற்றவில்லை.
கண்டி இராஜதானியை கைப்பற்றியது. ஒரு இடத்தையும் விட்டு வைக்கவில்லையென்பதை காண்பிக்கவே. நுவரெலியாவினை கூட ஓரு சுற்றுலா மையமாகவே பயன்படுத்தியுள்ளனர். சீனர்களுக்கு அநுராதபுரத்திலேயே, பொலநறுவையிலையோ இருப்பதை விட வடகிழக்கில் தான் கரையோரப்பகுதி மூன்றில் இரண்டு உள்ளது.
இன்று கடலட்டை வளர்ப்பார்கள்,நாளை கொச்சி தோட்டம் செய்வார்கள்,எங்கள் ஆற்றில் வந்து மீன்பிடிப்பார்கள்.இது சீனாவின் ஊடுறுவல் திட்டம். துறைமுக நகரமென்பதை காட்டி வரி செலுத்தாமல் இருப்பதற்கான திட்டமாகவும் இருக்கலாம்.
துறைமுக நகரில் பதிவு செய்து விட்டு வெளியில் சென்று தமது நடவடிக்கைகளை சீனர்கள் முன்னெடுக்க முடியும்.இது ஆரம்பம் மட்டுமே. இன்று கிழக்கினை மீட்கப்போகின்றோம் என்று கூறிவிட்டு வந்தவர்கள் எதனையும் மீட்க முடியாமல் நிற்கின்றனர்.வருங்காலத்தில் சீனாவிடமிருந்தும் கிழக்கினை மீட்க வேண்டிய நிலைமையும் வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.