உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மற்றுமொரு முக்கியஸ்தர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அஹமட் லுக்மான் தாலிப் என்ற நபர் 2 வருடங்கள் இரண்டு மாதங்களின் பின்னர் அவுஸ்திரேலியா பெரடல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மெல்பேர்னில் இரத்தின கல் வியாபாராம் செய்யும் தாலிப், ஐஸ் மற்றும் அல்கைதா அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கியுள்ளதாக அவுஸ்திரேலியா விசாரணைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
2010ஆம் ஆண்டு மாவின் மர்மாரா என்ற பெயரில் காஸா பிரதேசத்திற்கு சென்று ஆயுதம் வழங்கும் போது துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் காயமடைந்துள்ளார்.
எனினும் இலங்கை புலனாய்வு பிரிவிற்கு அது தொடர்பான தகவல் கிடைக்கவில்லை என தெரியவந்துள்ளது.
ஏற்கனவே அவுஸ்திரேலியா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு மேலும் சில ஐஎஸ் செயற்பாட்டாளரினால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய தாலிப்பின் ஐ.எஸ் தொடர்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தாலிபின் சட்டத்தரணி முன்வைத்த பிணை கோரிக்கையை அவுஸ்திரேலிய உயர் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார்.
இதேவேளை, ஐ.எஸ் தொடர்பிற்கு ஆதரவு வழங்கும் குற்றச்சாட்டிற்கமைய கைது செய்யப்பட்டுள்ள தாலிப்பின் தந்தை கட்டாரில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட தாலிப் மற்றும் அவரது தந்தை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தொடர்புபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதென பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.