கடந்த ஆண்டு சுங்கத்திலிருந்து உலர்ந்த பாக்குகளை விடுவிப்பதற்காக போலியான சான்றிதழ்களை வழங்கியதற்காக இரண்டு பெண் அதிகாரிகள், உதவி விவசாய பணிப்பாளர் மற்றும் விவசாய பயிற்றுவிப்பாளர் ஆகியோரை குற்றவியல் புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.
இலங்கை சுங்கத்துறையின் முறைப்பாட்டை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்கலன்களை உரிய முறையில் ஆய்வு செய்யாமல் தனிமைப்படுத்தப்பட்ட சான்றிதழ்களை அதிகாரிகள் வழங்கியதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் வேறு யாராவது தொடர்புபட்டிருக்கிறார்களா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் நடந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.



















