இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் முல்லைத்தீவை சேர்ந்த 49 வயதான நபர் ஒருவர், கடந்த சில மாதங்களின் முன்னர் தாயகம் திரும்பிய நிலையில் அவருக்கும், 23 வயதான யுவதியொருவருக்கும் கடந்த சில நாட்களின் முன்னர் சுகாதார முறைப்படி பதிவுத்திருமணம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் அவர்களின் பதிவு திருமணம் நடந்த போது, முள்ளியவளை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் அங்கு சென்று தகராற்றில் ஈடுபட்டுள்ளார்.
யுவதியை தான் நீண்டநாட்களாக காதலித்து வந்ததாகவும், ஒரு மாதத்திற்கு முன்னர் வரை தன்னுடன் காதல் தொடர்பில் இருந்து விட்டு, திடீரென தொடர்பை நிறுத்தி திருமணத்தில் இணைவதாக கூறி அங்கு தகராற்றில் ஈடுபட்டார்.
இதன்போது இளைஞன் மதுபோதையில் இருந்ததாக கூறப்படும் நிலையில் இரு வீட்டாராலும் இளைஞன் அங்கிருந்து விரட்டப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இதை தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் தனது முகநூலில் பதிவிட்ட இளைஞன், தனது காதலி வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தனது தந்தை வயதான ஒருவரை திருமணம் செய்துள்ளதாகவும், தனக்கு நம்பிக்கைத்துரோகம் இழைத்தாகவும் பதிவிட்டுள்ளார்.
எனினும், சில மணித்திாயலங்களிலேயே அவர் அந்த பதிவை அகற்றி, “எங்கிருந்தாலும் வாழ்க“ என முகநூலில் பதிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.