பொதுவாக உடலில் ஏற்படும் Cirrhosis மற்றும் உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கல்லீரல் சார்ந்த பல்வேறு பாதிப்புகளுக்கும் மதுப்பழக்கம்தான் முக்கிய காரணம் என பலரும் நினைக்கின்றனர்.
இதுபோன்ற கல்லீரல் சார்ந்த பிரச்சினைகளுக்கு மதுப்பழக்கம் மட்டுமின்றி உடல் பருமனும் முக்கிய காரணமாக இருக்கிறது.
அதீத மதுப்பழக்கம் மற்றும் உடல் பருமன் இரண்டும் சேர்ந்து கல்லீரலில் அதிகளவு கொழுப்பை சேர்க்கின்றன. இந்த பாதிப்பு non-alcoholic fatty liver disease – NAFLD என அழைக்கப்படுகிறது.
உடலில் NAFLD ஏற்படுத்தும் பாதிப்புகள் நம் உடலில் கல்லீரல் மிகமுக்கியமான உறுப்பு ஆகும். இது நாம் உட்கொள்ளும் உணவு செரிமானம் ஆகவும், சேதமடைந்த செல்களை சீர்ப்படுத்தி உடலுக்கு தேவையான இரும்பு சத்தை சேமித்து வைக்கவும், உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை சக்தியாக மாற்றி உடல் சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளவும் வழி வகுக்கிறது.
மேலும், கல்லீரலில் அனைவருக்குமே சிறிதளவு கொழுப்பு இருக்கும். உடல் பருமன் இருப்பவர்களுக்கு கல்லீரலில் கொழுப்பின் அளவு 5 முதல் 10 சதவீதம் வரை இருந்தால் அவர்களுக்கு NAFLD பாதிப்பு இருப்பதை உறுதிப்படுத்தி விடலாம்.
இதனிடையே, பெரும்பாலானோருக்கு NAFLD உடலில் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. சிலருக்கு கல்லீரல் வீங்கி தசைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த பாதிப்பு (Non-Alcholic Steato Hepatitis – NASH) என அழைக்கப்படுகிறது.
இந்த பாதிப்பு காரணமாக உடலில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு தசை வீங்கி கல்லீரல் செயல்பாட்டை குறைக்கும். தசை அதிகளவு வீக்கம் அடையும் நிலையைதான் cirrhosis என அழைக்கின்றனர்.
இது கல்லீரல் செயலிழப்பு மற்றும் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட காரணமாகலாம்.
NAFLD ஏற்படுவதற்கான காரணங்கள்
சிலருக்கு NAFLD எந்த விதமான காரணங்கள் இன்றியும் ஏற்படலாம். எனினும், சிலருக்கு கீழ்கண்ட காரணங்களாலும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது.
டைப் 2 நீரிழிவு நோய்
மாரடைப்பை ஏற்படுத்தும் வளர்சிதை மாற்றங்கள்
பரிந்துரைக்கப்பட்ட மருந்து வகைகளை உட்கொள்ளுதல்
அறிகுறிகள்
அடிவயிற்று பகுதியில் வலி அல்லது வயிறு நிறைந்துள்ளதை போன்ற உணர்வு ஏற்படுதல்
குமட்டல் பசியின்மை
கண் மற்றும் சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல்
அதிகளவு களைப்பு ஏற்படுதல் மன குழப்பம் கால்கள் மற்றும் அடிவயிறு வீங்குதல்
சிகிச்சை முறைகள்
உடல் பருமன் காரணமாக ஏற்படும் NAFLD பாதிப்பை சரி செய்ய உடல் எடையை குறைப்பதே தீர்வாகும்.
மருத்துவ மேற்பார்வையில் சீரான எடை குறைப்பு மேற்கொள்ளும் போது இந்த பாதிப்பு மெல்ல சரியாக துவங்கும். இதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மற்றும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
இத்துடன் NAFLD பாதிப்பை கட்டுக்குள் கொண்டுவர மருத்துவர்கள் வழங்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சிகிச்சை பலன் அளிக்காமல் நிலைமை மோசமானால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே ஒரே தீர்வு