கரப்பான் பூச்சிகள் என்றாலே மிகவும் அருவருப்பானவை, அதை யாருமே தங்களுடைய வீட்டில் இருப்பதை விரும்புவதில்லை.
எறும்பு, கொசு போன்றவற்றைக்கூட சகித்துக் கொண்டுவிட முடியும்.
ஆனால் கரப்பான்பூச்சி மற்றும் எலி கிச்சனுக்குள்ளும் வீட்டுக்குள்ளும் நுழைந்துவிட்டால் வீட்டையே ஒரு வழி ஆக்கிவிடும்.
கரப்பான்பூச்சி மற்றும் எலித் தொல்லை அதிகமாகிவிட்டால் பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிடும். கரப்பான்பூச்சிகள் மிக ஆபத்தான பாக்டீரியாக்களை வீட்டுக்குள் கொண்டு வருகின்றன. அவை உங்கள் உணவையும் மாசுபடுத்தும்.
அதைவிட அவற்றைப் பெருக விட்டுவிட்டால் ஒழிப்பதோ கொள்வதோ மிக்க கடினம். கடைகளில் கரப்பான்பூச்சிகளை விரட்டும் ஸ்பிரேக்கள் கிடைக்கின்றன.
ஆனால் அவற்றின் வாசனைகளும் கூட இந்த நவீன கரப்பான்பூச்சிகளுக்குப் பழகிவிட்டன. அந்த வாசனை வந்தாலே ஓடி ஒழிந்து கொள்கின்றன. அதனால் சில வீட்டு பராமரிப்பு முறைகளின் முலம் அவற்றை விரட்ட முயற்சி செய்யலாம்.
ஹேர் ப்ரே பயன்படுத்துங்கள்
வீட்டில் இருக்கும் கரப்பான்பூச்சி தொல்லைக்கு இது மிகச்சிறந்த தீர்வாக இருக்கும்.
கரப்பான்பூச்சி சுற்றித் திரந்து கொண்டிருக்கும்போது அதன் மீது இந்த ஹேர் ஸ்பிரேவை அடித்தால் அதனால் அந்த இடத்தைவிட்டு நகரவோ, கை மற்றும் கால்களை அசைக்கவோ முடியாது.
மீண்டும் ஒருமுறை அடித்தால் போதும் மூச்சுத் திணறி இறந்து போய்விடும்.
பிரிஞ்சி இலைகள்
பிரிஞ்சி இலைகளின் வாசனைகள் கரப்பான்பூச்சிகளுக்குப் பிடிக்காது. துர்நாற்றம் பரவுகிற இடங்களில் தான் கரப்பான்பூச்சிகள் குடியிருக்கும்.
நல்ல வாசனை இருக்குமிடத்தில் கரப்பான்பூச்சிகள் வருவதில்லை. அதனால் சில பிரிஞ்சி இலைகளை எடுத்து மிக்சியில் போட்டு பொடி செய்து கொள்ளுங்கள்.
அந்த பொடியை கரப்பான்பூச்சிகள் சுற்றித் திரியும் இடங்களில் தூவி விடுங்கள். அந்த வாசனைக்கு கரப்பான்பூச்சிகள் ஓடிவிடும்.
கிச்சனில் சிறிது சோப்பு கரைசலில் இந்த பொடியை கலந்து ஸ்பிரே செய்துவிடுங்கள். அப்போதும் கரப்பான்பூச்சி வருவது குறையும்.
ஒட்டும் பொறிகளை பயன்படுத்தலாம்
எலிகளைப் பிடிப்பதற்கு கடைகளில் பசை போல் மருந்து தடவப்பட்ட அட்டைகள் வைக்கப்பட்டிருக்கும்.
வீட்டில் கரப்பான்பூச்சிகள் அதிகமாக சுற்றித் திரியும் இடங்களில் வைத்து விடுங்கள். வீட்டில் போடப்பட்டிருக்கும் தரைவிரிப்புகள், மேட்களுக்கு அடியில் இந்த அட்டைகளை வைத்து விடுங்கள்.
காலையில் அட்டையில் வீட்டில் சுற்றித் திரிந்த கரப்பான்பூச்சி அத்தனையும் அந்த அட்டையில் ஒட்டிக் கொண்டிருக்கும்.




















