முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் காணி ஒன்றினை துப்பரவு செய்யும் போது இராணுவ மர்ம பொருட்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனியார் காணி உரிமையாளர் ஒருவர் இன்று தனது காணியை துப்பரவு செய்த போது குறித்த மர்ம பொருட்கள் மண்ணில் புதைத்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொலிஸாருக்கும் அருகில் உள்ள படையினருக்கு காணி உரிமையாளர் தகவல் வழங்கியதை தொடர்ந்து வெடிபொருள் அகற்றும் பிரிவினர் கிளிநொச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டு குறித்த பகுதி நீதிமன்ற அனுமதியுடன் இன்று அகழப்பட்டது.
இதன் போது இராணுவ பயன்பாட்டுடன் தொடர்புடைய மர்ம பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஒருவகையான வெடிபொருட்களாக இது இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.