இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. நேற்று 40 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று நேற்றைய கொரோனா பாதிப்பை விட இன்றைய பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 38 ஆயிரத்து 949 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 10 லட்சத்து 26 ஆயிரத்து 829 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 542 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 4,12,531 ஆக உயர்ந்து உள்ளது. இதன்மூலம் உயிரிழப்பு விகிதம் 1.32 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 40,026 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 01 லட்சத்து 83 ஆயிரத்து 876 ஆக உயர்வடைந்து உள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.29 சதவீதமாக உள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது வரை 4,30,422 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.38 சதவீதமாக உள்ளது.
நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 39 கோடியே 53 லட்சத்து 053 ஆயிரத்து 767 ஆக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.