ஆணாக மாற விரும்பிய பெண் ஒருவர் 2 லட்சம் ரூபாயை பறிகொடுத்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர், அதிகமாக தொல்லைகளை அனுபவித்து வந்த நிலையில், இதிலிருந்து தப்பிக்க ஆணாக மாற தீர்மானம் செய்துள்ளார்.
அதனால் அவர் ஆணாக மாற விரும்பி ஆன் லைனில் அதற்கான இடத்தினை தேடிய போது, லூதியானாவைச் செர்ந்த ஒரு பெண் அவரைத் தொடர்பு கொண்டுள்ளார்.
அப்பெண் தானும் ஆணாக இருந்து பெண்ணாக மாறியதாகவும், அதே போன்ற தனது குறித்த இளம்பெண்ணையும் மாற்ற உதவி செய்வதாக கூறி இரண்டு லட்சம் ரூபாய் கேட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த இளம்பெண் தனது தந்தையின் மருத்துவ சிகிச்சைக்கு வைத்திருந்த 2 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு, லூதியானா நண்பரைச் சந்திக்க சென்றுள்ளார்.
அங்கு சென்றதும், அந்த பெண் அவரை ஒரு இடத்தில் தங்க வைத்து விட்டு அவரிடமிருந்த பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். இதனை அறிந்த பெண் மீண்டும் தனது வீட்டிற்கு வந்து தனக்கு நடந்த கொடுமையினை தனது சகோதரரிடம் கூறியுள்ளார்.
பின்பு பணத்தினை கேட்பதற்கு சகோதரரை அழைத்துக்கொண்டு சென்ற போது, அவர்களை மேலும் இரண்டு பேர் தாக்கியுள்ளனர். பின்பு காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.