தென்னிலங்கையில் கோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண்ணொருவர் அடுத்த நாள் உயிரிழந்துள்ளார்.
அக்மீமன பிரதேசத்தை சேர்ந்த 62 வயதான திருமணமாகத பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொவிட் தொற்றுக்குள்ளாகி 16 நாட்கள் வைத்தியசாலை சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பெண் மறுநாள் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணுக்கு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், கொவிட் தொற்றியமையினால் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பெண் அதிக இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஏற்பட்ட காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இந்த பெண் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.