ஆடி செவ்வாய்க்கிழமைகளில் விரதமிருந்து அம்மனை வழிபடுவதால் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் கொண்டவர்களுக்கு அந்த தோஷத்தின் கேடான பலன்கள் நீங்கும்.
ஆடி மாத செவ்வாய் கிழமைகள் அனைத்துமே இறை வழிபாடு மற்றும் விரதங்களுக்கு ஏற்ற நன்னாளாகும். செவ்வாய் கிழமை என்பது நவ கோள்களில் “செவ்வாய்” கிரகத்தின் ஆதிக்கம் கொண்ட நாளாகும். மேலும் இந்த செவ்வாய் கிழமை முருகப்பெருமான் மற்றும் எந்த ஒரு பெண் தெய்வத்தையும் விரதமிருந்து வழிபடுவதற்கு ஏற்ற கிழமையாகும்.
நீங்கள் இக்கிழமைகளில் முருகப்பெருமானை வழிபட்டு விரதமிருக்க விரும்பினால் அந்த முருக பெருமானுக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களை பாடி வணங்கி, பின்பு அருகிலுள்ள முருகப்பெருமான் கோவிலுக்கோ அல்லது சந்நிதிக்கோ சென்று வணங்க வேண்டும்.
இந்த ஆடி செவ்வாய்களில் இப்படி விரதமிருந்து வழிபடுவதால் ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் கொண்டவர்களுக்கு அந்த தோஷத்தின் கேடான பலன்கள் நீங்கும்.
இந்த ஆடிசெவ்வாய்களில் அம்மனுக்கு விரதமிருப்பவர்கள் வீட்டில் பூஜையறையில் விளக்கேற்றிய பின் அம்மனுக்குரிய மந்திரங்களை கூறி வணங்கி, பிறகு அருகிலுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும். இதனால் எல்லோரையும் காக்கும் தாயான அம்மனின் மனம் குளிர்ந்து நமக்கு ஆரோக்கியம் மேம்படும், திருமணம் புத்திரபேறு தாமதம் நீங்கும். கடன்கள் தீரும். மற்றும் எல்லாவித வளங்களும் உண்டாகும்.