ரியல்மி நிறுவனம் இந்தியாவில் வாட்ச் 2 மற்றும் வாட்ச் 2 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருக்கிறது.

ரியல்மி நிறுவனத்தின் வாட்ச் 2 மற்றும் வாட்ச் 2 ப்ரோ ஸ்மார்ட்வாட்ச் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கின்றன. இரு ஸ்மார்ட்வாட்ச் மாடல்களும் LCD ஸ்கிரீன், இதய துடிப்பு சென்சார், SpO2 மாணிட்டரிங், ஆக்டிவிட்டி டிராக்கிங், ஸ்லீப் மாணிட்டரிங் மற்றும் 90-க்கும் அதிக ஸ்போர்ட் மோட்களை கொண்டிருக்கின்றன.
ரியல்மி வாட்ச் 2 ப்ரோ மாடலில் ஜி.பி.எஸ். வசதி, 390 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரி 14 நாட்களுக்கான பேக்கப் வழங்குகிறது.

ரியல்மி வாட்ச் 2 அம்சங்கள்
– 1.4 இன்ச் 320×320 பிக்சல் LCD ஸ்கிரீன்
– 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
– 3-ஆக்சிஸ் அக்செல்லோமீட்டர்
– இதய துடிப்பு சென்சார், ரோட்டார் வைப்ரேஷன் மோட்டார்
– ப்ளூடூத் 5.0
– 90 ஸ்போர்ட்ஸ் மோட்கள்
– இதய துடிப்பு சென்சார், SpO2 சென்சார்
– நோட்டிபிகேஷன்
– வாட்டர் ரெசிஸ்டண்ட் (IP68)
– 315 எம்.ஏ.ஹெச். பேட்டரி



















