மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஸ்மார்ட்போனினை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இன் பிராண்டு ஸ்மார்ட்போன்களை இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்தது. தற்போது மற்றொரு இன் சீரிஸ் ஸ்மார்ட்போனை வெளியிடும் பணிகளில் மைக்ரோமேக்ஸ் ஈடுபட்டு வருகிறது. புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் பென்ச்மார்க் வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இன் 2 அல்லது இன் நோட் 2 என அழைக்கப்படலாம்.
கீக்பென்ச் தள விவரங்களின்படி புதிய மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் E7446 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி95 பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ், புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.
இவைதவிர புது ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் வெளியாகவில்லை. மைக்ரோமேக்ஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை ஜூலை 30 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோமேக்ஸ் இன் 2பி அல்லது இன் 1பி மாடல்களின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என கூறப்படுகிறது. வரும் நாட்களில் புது ஸ்மார்ட்போனின் கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.