ஒன்ராறியோவின் வடமேற்கு பகுதியில் 17 இடங்களில் புதிய இடங்களில் காட்டுத்தீ உருவாகியுள்ளதால், கிராமப்புறங்களில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது எரிந்து கொண்டிருக்கும் காட்டு தீயின் எண்ணிக்கை 148 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில், 44 காட்டு தீ கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருப்பதாகவும், கூறப்படுகிறது.
அதேவேளை ஒன்ராறியோவின் வடகிழக்குப் பகுதியில், புதிதாக எந்த காட்டுத் தீயும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.