ஐரோப்பிய நாடான பிரான்ஸ், கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அங்கு இதுவரை கொரோனா 3-வது அலை வரை ஏற்பட்டு இருந்தது.
இதற்கிடையே சில நாட்களாக பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்தபடி இருந்து வருகிறது. பிரான்சில் கொரோனா 4-ம் அலை தாக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதையடுத்து பிரான்சில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுளுககு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பாரீஸ் மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினார்கள். கட்டாய கொரோனா கட்டுப்பாடுகள் தங்களது சுதந்திரத்தை பறிக்கிறது என்று கோஷமிட்டனர்.
போராட்டக்காரர்கள் கூறும்போது, மனித உரிமை உள்ள நாட்டில் இப்படி செய்வது நம்ப முடியாதது. இதனால் தான் தெருக்களில் இறங்கி போராடுகிறோம். எங்கள் சுதந்திரம் ஆபத்தில் இருப்பதாக நினைக்கிறோம்’ என்றனர். போராட்டம் நடத்திய மக்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர்.
ஆனால் மக்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போலீசார் – போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஒருவரை போலீசார் அழைத்து சென்ற காட்சி பாரீசில் நடந்த மோதலில் 3 போலீசார் காயம் அடைந்தனர். போராட்டங்கள் தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மன் தெரிவித்துள்ளார்.