இன்றைக்கு பெரும் பிரச்சனையாக உருவெடுத்து நிற்பது மாரடைப்பு மற்றும் இதயம் தொடர்பான நோய் தான். இதற்கு முழு முதற் காரணம் நம்முடைய உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் தான்.
மாரடைப்பு வராமல் தடுக்க நாம் பெரும் மெனக்கடல்கள் எடுக்க வேண்டிய அவசியமில்லை. சின்ன சின்ன மாற்றங்களை மேற்கொண்டாலே போதுமானது. அதுவும் ஒரு சில உடற்பயிற்சிகள் , யோகசானங்கள் பெரிதும் உதவுகின்றது.
அந்தவகையில் தற்போது மாராடைப்பு வராமல் தடுக்கும் ஒரு பயிற்சி ஒன்றை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
யோகா விரிப்பில் குறுக்கே கால்களை மடக்கியவாறு ரிலாக்ஸாக அமர்ந்து கொண்டு, இரண்டு கைகளையும் முட்டிகளில் ஊன்றிக் கொள்ளவும். சாதாரணமாக மூச்சை விடவும்.
பின்னர் நாக்கை வெளியில் இரண்டு பக்கமும் மடக்கி ஒரு ட்யூப் வடிவில் நீட்டிக் கொள்ள வேண்டும். இப்போது மடக்கிய நாக்கு வழியாக காற்றை நன்கு ஆழமாக உள்ளே இழுக்கவும்.
அப்போது வயிறு உள்நோக்கி ஒட்டியவாறு இருக்கும். வாய்வழியாக சத்தமாக காற்றை இழுக்க வேண்டும்.
பிறகு, உள்ளிழுத்த காற்றை, வாயை மூடிக்கொண்டு மூக்கு வழியாக மெதுவாக வெளியேற்ற வேண்டும்.
பலன்கள்
- இந்த பிராணாயாமம் மூச்சினை சமநிலைப்படுத்தி, ஆக்ஸிஜனேற்றத்தை அதிகரிக்கிறது.
- உடலினுள் வெப்பத்தையும் உருவாக்குகிறது. ரத்தத்தில் சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது.
- ரத்த அழுத்தத்தை சமநிலைப்படுத்துவதால் மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. உடலினுள் இருக்கும் நச்சுக்களை எல்லாம் வெளியேற்றுகிறது.
- உடல், மனம் இரண்டும் புத்துணர்வு அடைகிறது. நுரையீரலின் வேலையை மேம்படுத்துவதால் அதனுள் இருக்கும் எல்லா உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது.
- உள்ளே சேர்ந்திருக்கும் சளி இதனால் வெளியேறி விடும். இது ஆஸ்துமா நோயாளிகளுக்கும் சிறந்த ஆசனம்.