நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் உயிரிழந்த சிறுமி ஹிசாலினி வசித்த அறையில் எழுத்தப்பட்டிருந்த “என் சாவுக்கு காரணம்” என்ற வசனம் தொடர்பில் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஹிசாலினியின் சகோதரரான திருபிரசாத் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, எனக்குத் தெரிந்த வரையில் என்னுடைய தங்கையான ஹிசாலினிக்கு ஆங்கிலம் எழுதுவதற்கான திறமை இல்லை.
ஏதாவது ஒன்றை பார்த்து கொண்டு எழுதும் திறமை எனது தங்கையிடம் இருக்கிறது.
ஆனால், ஆங்கில எழுத்துகளை ஒன்றோடு ஒன்று கோர்த்து வசனமாக்கி எழுதும் வகையில் எனது தங்கைக்கு ஆங்கில அறிவு இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.