கோவிட் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் உடனடியாக சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,
தொற்றுநோய் பரவலாகப் பரவி வருவதாகவும், தினமும் பலர் வைரஸால் பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
புள்ளி விபரங்களிலும் பிரச்சினைகள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தடுப்பூசியை சுகாதார அமைச்சின் கீழ் இல்லாமல், இராணுவத்தைக் கொண்டு செலுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
12 அகவைக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்றும் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையால் உயிர்கள் காப்பாற்றப்படுகின்ற போதிலும், அரசாங்கம் தற்போது அவர்களின் ஆலோசனையை கேட்க மறுக்கிறது.
நாட்டை முடக்குவதற்கான மருத்துவர்களின் கோரிக்கைகளை நிராகரிப்பதற்கான காரணங்களை அரசாங்கம் விளக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் கேட்டுள்ளார்.
கோவிட் விடயத்தில் உலக சுகாதார மைத்தின் கீழ் ஒரு தனி நிபுணர் குழு இருக்க வேண்டும். இலங்கையில் மட்டும் அத்தகைய குழு அமைக்கப்படவில்லை ஏனைய எல்லா நாடுகளிலும் இதுபோன்ற குழு செயற்படுகிறது.
எனவே அரசாங்கம் உடனடியாக மருத்துவ நிபுணர்களை ஒன்றிணைத்து இந்தக் குழுவை அமைக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.



















