கோவிட் – 19 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெறாத குடியிருப்பாளர்கள் அல்லது கொழும்பில் பணிபுரியும் 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நிறுவப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாநகரசபையின் ஒத்துழைப்புடன் சமூக பொலிஸ் பிரிவினால் சுகததாஸ விளையாட்டரங்கில் அமைக்கப்பட்டுள்ள விசேட தடுப்பூசி மையம் இன்றைய தினம் இயங்குவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.
அத்துடன் இந்த சிறப்பு தடுப்பூசி மையமானது இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்காக சுகததாஸ விளையாட்டரங்கை நோக்கி பெருமளவானவர்கள் படையெடுத்து வருவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.