யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை வீதியில் கல்லுண்டாய் பகுதியில் இ.போ.ச பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
காரைநகரிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் வந்த இ.போ.ச பேருந்து காலை 7.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.
. இந்த விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறித்த பகுதியில் வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் காலை மழை பெய்ததன் காரணமாக வீதி வழுக்கும் தன்மையுடன் காணப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேகமாக வந்த பேருந்து அப்பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த குறித்த பேருந்தின் சாரதி தப்பி ஓடியுள்ள நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.