ஒட்டாவா பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதிக்குள் ஒரு டோஸ் தடுப்பூசியாவது போட்டுக்கொள்ள வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா டெல்டா மாறுபாடின் தாக்கம் அதிகரித்து வருவதாலையே, தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது என பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
மேலும், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கள் நண்பர்களை தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொள்ள தயங்குபவர்கள் கடுமையான விதிகளுக்கு உட்பட நேரிடும் எனவும், அடிக்கடி மருத்துவ சோதனை மேற்கொள்ளும் நிலையும் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்காக புதிய விதிகளை கூடியவிரைவில் அமுல்படுத்தவும் திட்டமிட்டு வருவதாக பலகலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆனால் மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது. ஒட்டாவா பல்கலைக்கழகம் மட்டுமின்றி, பல முக்கிய பல்கலைக்கழகங்களும் தடுப்பூசி கட்டாயம் என அறிவித்துள்ளது.