இலங்கையில் பிராணவாயுவுக்கான தேவைப்பாடு வெகுவாக அதிகரித்துள்ளமையினால் பிராணவாயுவை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
மேலும் கொழும்பில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது உச்சபட்ச அளவில் பிராணவாயு உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் இதற்கு மாற்றீடாகவே வெளிநாடுகளிலிருந்து பிராணவாயு இறக்குமதி செய்யும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அத்தோடு இது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறவுள்ளது. மேலும் வைத்தியசாலைகளுக்கு அருகிலேயே பிராணவாயுவை உற்பத்தி செய்வதற்கான இயந்திரங்களும் வைத்தியசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்வாறு உச்ச அளவில் பிராணவாயு உற்பத்தி இடம்பெறுகின்ற நிலையில் நோயாளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.