விளையாட்டுச் சிகிச்சை குழந்தைகளின் உணர்வுபூர்வமான பிரச்சனைகளை கண்டறியவைத்து அவைகளை நல்ல முறையில் சமாளிக்க அவர்களுக்கு உதவுகிறது.
விளையாட்டுச் சிகிச்சை என்பது ஒருவிதமான உளவியல் சிகிச்சை. இங்கே குழந்தைகள் தங்களுடைய உணர்வு மற்றும் மனநலப் பிரச்சனைகளை வெளிப்படுத்துவதற்கும், அவற்றைக் கையாள்வதற்கும் விளையாட்டு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகள் தங்களுடைய உணர்வுகளை தாங்களே அலசுகிறார்கள், அதை சிகிச்சையாளர் அல்லது தங்களது பெற்றோரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்.
விளையாட்டு என்பது மனிதர்களுக்கு ஒரு மிகவும் இயல்பான விஷயமாக இருக்கிறது. குறிப்பாக குழந்தைகள் இதனை மிகவும் ரசிக்கிறார்கள். விளையாடும்போது அவர்கள் எந்தவிதமான அசௌகரியத்தையும் உணர்வதில்லை. ஆகவே விளையாட்டை ஓர் இயற்கையான வழியாகப் பயன்படுத்தி ஒரு குழந்தையை தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்தச் செய்யலாம். குழந்தைகளே பதில் தேட வைக்கலாம். அவ்வளவு என் குழந்தைகளை விளையாட விட்டாலே போதும். அதுவே அவர்களுக்கு நல்ல மாற்றமாக அமைந்து அவர்கள் பிரச்சனைகளைக் குறைக்கும்.
வாழ்க்கை நல்ல அனுபவமாக அமைந்து விளையாட்டாகப் பார்க்கும்போது விளையாட்டின் மூலம் தங்களுடைய உணர்வுகளை அலசும்போது, குழந்தைகள் தங்களுடைய பிரச்சனைகளிலிருந்து பாதுகாப்பான தொலைவிற்கு விலகி நிற்கப் பழகுகின்றன.
விளையாட்டுச் சிகிச்சை அளிக்கும் ஒருவர் குழந்தையிடம் நேரடியாக “உனக்கு என்ன பிரச்சனை” என்று கேட்காமல், மறைமுகமான அணுகுமுறையில் அவர்களுடைய தேவைகளைப் புரிந்துகொள்கிறார். மற்ற உளவியல் மதிப்பீடுகளோடு விளையாட்டுச் சிகிச்சையையும் பயன்படுத்தலாம். சில நேரங்களில் விளையாட்டுச் சிகிச்சை அளிப்பவர் அதன்மூலம் கலையையும் பயன்படுத்தலாம். அதன்மூலம், குழந்தையின் உணர்வுகளை வெளிக்கொண்டு வரலாம். மூன்று வயது மற்றும் அதற்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு இந்த விளையாட்டுச் சிகிச்சையை பயன்படுத்தலாம்.