ஒவ்வொருவருக்கும் உள்ளேயும் ஒரு திறமைம ஒளிந்திருக்கும். உங்கள் திறமை சமையல் செய்வது, பாடுவது போன்று இயல்பானதாக இருந்தாலும் அதிலும் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரியும்.
வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அதற்கான வழிகளை கண்டறிந்து தன்னை மெருக்கூட்டி கொள்பவர்கள் மட்டுமே சாதனையாளர்களாக மாறுகின்றனர். சுய முன்னேற்றத்துக்கு அடிப்படையானது சுய முயற்சி. சுயமுயற்சி என்பது தம்முடைய குணங்கள், தனித்திறமைகள், நிறை, குறைகள் போன்றவற்றை மதிப்பீடு செய்து நம்மை நாமே மேம்படுத்தி கொள்வதாகும். இன்றை இளைஞர்களுக்கு சுயவளர்ச்சி குறித்த விழிப்புணர்வு அவசியமானது. சுயவளர்ச்சியை ஏற்படுத்துவற்கான வழிகளை இங்கே பார்க்கலாம்.
தனித்திறமை
ஒவ்வொருவருக்கும் உள்ளேயும் ஒரு திறமை ஒளிந்திருக்கும். உங்கள் திறமை சமையல் செய்வது, பாடுவது போன்று இயல்பானதாக இருந்தாலும் அதிலும் மற்றவர்களிடமிருந்து தனித்து தெரியும். அளவுக்கு ஏதாவதொரு சிறப்பு இருக்கும். அந்த தனித்தன்மையை கண்டறிந்து வளர்த்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் திறமை மற்றவர்களில் இருந்து எப்போதும் சிறிய அளவிலாவது மாறுபட்டு இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போது அந்த திறமையை சரியான நேரத்தில் சரியான இடத்தில் வெளிக்கொண்டு வர வேண்டும்.
மனவலிமை
எஎந்த செயலில் ஈடுபட்டாலும் மன வலிமையோடு செயல்பட வேண்டும். எதையும் நேர்மறை எண்ணத்தோடு அணுக வேண்டும். தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் சரியான இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் மனதை வலிமையாக்க தியானம், மூச்சுபயிற்சியில் ஈடுபடலாம். மனதிற்கு இனிமையான இசையை கேட்கலாம்.
பழக்கததை ஏற்படுத்துதல்
நம்முடைய நேர்மறை குணங்களையும், திறமைகளையும், செய்லபாடுகளையும் மேம்படுத்தி சுய வளர்ச்சி அடைவதற்கு நல்ல செயல்களை பழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வது, தியானம் செய்வது போன்றவற்றால் உடலின் ஆரோக்கியம் மேம்படும். நல்ல புத்தகங்களை படிப்பது. அறிவியலில் சிறந்தவர்களின் பேச்சுக்களை கேட்பது போன்றவற்றால் மனம் பக்குவப்படும். அறிவு மேம்படும்.
கட்டுப்பாடு
வளர்ச்சிக்கான பாதையில் செல்லும் போது பல விதமான நபர்களை சந்திக்க வேண்டியிருக்கும். அவர்களின் உதவியால் நாம் வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கும் செல்லலாம். அதுபோன்ற நபர்களின் உறவை வலிமையாக்க முற்பட வேண்டும். உறவுகளை வலிமையாக்குவதற்கு உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரிந்திருக்க வேண்டும். அழுகை, கோபம், மகிழ்ச்சி, போன்ற உணர்வுகளை கட்டுப்படுத்தி, சரியான இடத்தில் வெளிப்படுத்தினால் வாழ்க்கையில் வெற்றியை முழுமையாக அனுபவிக்க முடியும்.