சில கிறிஸ்தவ போதகர்கள் கோவிட் தடுப்பூசி பயன்பாட்டுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வருவதாக இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவை குற்றம் சுமத்தியுள்ளது.
இவ்வாறான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வது பரிசுத்த வேதாகமத்திற்கு எதிரானது என சில கிறிஸ்தவ மத போதகர்கள் பிரச்சாரம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவையின் தலைவர் ஜானக்க குமாரதுங்க ஆங்கில ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.
தங்களது பிரசங்கங்களில் பங்குபற்றும் விசுவாசிகளை தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டாம் என இந்த மத போதகர்கள் வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மத ரீதியாக இவ்வாறான தடைகள் கிடையாது எனவும் தனிப்பட்ட மத போதகர்கள் சிலர் இவ்வாறு பிழையாக மக்களை வழிநடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிறிஸ்தவர்கள் கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ள தயங்கத் தேவையில்லை எனவும், பரிசுத்த வேதாகமத்தில் தடுப்பூசி ஏற்றிக் கொள்ள வேண்டாம் என கூறப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.