கொழும்பில் போலி நாணயத்தாள்களை அச்சிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதன்போது போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட இயந்திரமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த இருவரும் கைது செய்யப்பட்ட போது அவர்களிடம் 100 ரூபாய் நாணயத்தாள்கள் 25 மற்றும் 500 ரூபாய் நாணயத்தாள்கள் 18 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கைப்பற்றப்பட்ட போலி நாணயத்தாள்களின் பெறுமதி 12500 ரூபாய் என தெரியவந்துள்ளது.
பொதுவாக போலி நாணயத்தாள்கள் அச்சிடும் நபர்கள் 1000 மற்றும் 5000 ரூபாய் நாணயத்தாள்களே அச்சிடுவதனை காண முடியும். 100 மற்றும் 500 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டமை மிகவும் அவதானத்திற்குரியதாகும்.
100 மற்றும் 500 ரூபாய் பணத்தாள் தொடர்பில் மக்கள் பெரிய அளவில் அவதானம் செலுத்தாமையினால் அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதற்கு இந்த மோசடியாளர்கள் தீர்மானித்துள்ளனர்.
எனவே அன்றாட கொடுக்கல் வாங்கல்களில் போது பயன்படுத்தும் 100 மற்றும் 500 நாணயத்தாள்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்த வேண்டும் என மக்களிடம் கேட்டுக்கொள்வதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.