பொதுமக்கள் தங்களின் உயிர் மீது ஆசை இருந்தால் வீட்டில் தங்கியிருக்குமாறு கடுமையாக வலியுறுத்துவதாக பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
நாட்டில் தற்போது சுகாதார பிரிவின் கொள்ளளவு அதன் திறனைத் தாண்டிவிட்டதாக பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்காலத்தில் கொரோனா தொற்றாளர்கள் வீதிகளில் மரணித்து விழுவார்கள் என்றும் பொதுச் சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்தார்.
இந்நிலையில் நாட்டை மீண்டும் முடக்குமாறு அரசாங்கத்தைக் கேட்க மாட்டேன் என்றும் நாட்டின் நிலைமைகளைப் புரிந்துகொண்டு சுய பயணக் கட்டுப்பாடுகளை தங்களுக்கு விதிக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்ளுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொது மக்களை இழந்து பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்துள்ளாகூறினார்.
மேலும் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவற்றினை கூறியுள்ளார்.