கடுமையான அந்நிய செலாவணி இருப்புத் தட்டுப்பாட்டை எதிர்கொண்டிருக்கின்ற நிலையில் 61.5 பில்லியன் ரூபா பெறுமதியான உடன்படிக்கையொன்றை சீனாவுடன் ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்துகொண்டுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய இந்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதாக கொழும்பிலுள்ள சீனத்தூதரகம் தனது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
சீன அபிவிருத்தி வங்கி மற்றும் ஸ்ரீலங்கா அரசாங்கமும் 61.5 பில்லியன் ரூபா உடன்படிக்கையொன்றை கைச்சாத்திட்டுள்ளதாக ஸ்ரீலங்காவுக்கான சீன தூதரகம் தெரிவிக்கின்றது. இரண்டு வருட குத்தகை அடிப்படையில் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகம் தனது ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளது.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கோரிக்கைக்கு அமைய, இந்த உதவித்திட்டம் வழங்கப்படுவதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவின் கொவிட் ஒழிப்பு நடவடிக்கைகள், பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல், நிதி ஸ்தீரத்தன்மையை உறுதிப்படுத்தல் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக இந்த நிதி உதவி வழங்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் குறிப்பிடுகின்றது.