இறைவனை வழிபடும் போது, அவரவர் வசதிக்கேற்ப இறைவனுக்கு அபிஷேகம் செய்தும் வழிபடுவர். அப்படி அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு பலன் இருக்கிறது. அதனைப் பார்ப்போம்..
நாம் வாழ்வில் மன அமைதியோடு இருக்க, இறை வழிபாட்டை மேற்கொள்கிறோம். அப்படி இறைவனை வழிபடும் போது, அவரவர் வசதிக்கேற்ப வழிபாட்டிற்கான பொருட்களை வழங்குவார்கள். மேலும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும் வழிபடுவர். அப்படி அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு பலன் இருக்கிறது. அதனைப் பார்ப்போம்..
மஞ்சள் பொடி – கடன் நிவர்த்தியாகும்.
பால் – ஆயுள் கூடும்
பசுநெய் – வீடு பேறு கிடைக்கும்
தயிர் – குழந்தை பாக்கியம் உண்டாகும்
எண்ணெய் – நோய் தீரும்
இளநீர் – போகமான வாழ்வு வரும்
தேன் – இன்பம் வந்துசேரும்
சந்தனம் – லட்சுமி கடாட்சம் உண்டாகும்
எலுமிச்சைச் சாறு – எம பயம் நீங்கும்
அன்னாபிஷேகம் – பெரும் பதவி கிடைக்கும்
பஞ்சாமிர்தம் – வெற்றி தேடி வரும்
விபூதி – பேர் சொல்லும் பிள்ளைகள் வாய்ப்பர்
பன்னீர் – புகழ் சேரும்
மலர்கள் – மகிழ்ச்சியான வாழ்வமையும்
குங்குமம் – மங்கல வாழ்வு கிடைக்கும்