18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி எப்போது வழங்கப்படும் என்ற விவரத்தை அரசிங்கம் வெளியிட்டுள்ளது.
18 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அடுத்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று தொற்றுநோயியல் பிரிவின் பதில் தலைமை வைத்திய நிபுணர் டொக்டர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.
நாட்டில் இந்த வயதினரில் சுமார் 3.2 மில்லியன் பேர் இருக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


















