கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் விடயத்தில் சினோபார்ம் குறைந்தளவு பலனையே அளித்துள்ளமை பஹ்ரைனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதுதாக பேராசிரியர் நீலிகா மாலவிகா தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதியவர்கள் விடயத்தில் சினோபார்ம் குறைந்தளவு பலனையே அளித்துள்ளதை ஆய்வு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசிக்கு பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் சினோபார்ம் செலுத்திக்கொண்டவர்கள் அதிகமாக உயிரிழந்துள்ளமை பஹ்ரைன் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினோபார்ம் செலுத்திக்கொண்டவர்கள் 0.46 வீதமும்( 112 மரணங்கள்) பைசர்-பயோன்டெக் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டவர்கள் 0.15 வீதமும்(மூன்று மரணங்கள்) அஸ்டிரா ஜெனேகா செலுத்திக்கொண்டவர்கள் 0.03 உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
எனினும் நான்கு தடுப்பூசிகளும் தொற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்படல்,தீவிரகிசிச்சை பிரிவில் அனுமதிக்கப்படல்,மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்துவதில் வெற்றிகரமாக செயற்பட்டுள்ளன எனவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
சினோபார்ம் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் அதன் பின்னரும் கொரோனாவால் பாதிக்கப்படும்,மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும்,தீவிரகிசிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்படும் உயிரிழக்கும் ஆபத்துக்கள் அதிகமாக உள்ளதாக ரிசேர்ச் ஸ்குயரின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் நீலிகா மாலவிகா தெரிவித்தார்.
டெல்டா வைரஸ் பரவத்தொடங்கிய பின்னரும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசிகள் பங்களித்துள்ளன என்பதை ஆய்வின் முடிவுகள் உறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அத்துடன் உலகளாவிய ரீதியில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை விஸ்தரிக்கவேண்டும், என்பதையும் ஆய்வு வெளிப்படுத்தியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.